பிரதமர் மோடி தோல்வி பயத்தில், விரக்தியில் வீண்பழி சுமத்துவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தோல்வி பயம் என்ன செய்யும்? என்ற தலைப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது எஸ்க் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்!
இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் – பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்!
பத்தாண்டு கால சாதனைகள் ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும், மக்கள் நலத்திட்டங்களை மோடி கொச்சைப்படுத்துகிறார்.
ஜூன்-4 இந்தப் பொய்கள் உடைபடும்! வெறுப்பு அகலும்! #INDIA வெல்லும்! என்றும் பதிவிட்டிருக்கிறார்.