வந்தேபாரத் ரயிலுக்கு(vande bharat train) நீல நிறத்திற்கு பதிலாக காவி நிறம் பூசப்பட்டதன் காரணம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
வந்தே பாரத் ரயிலை 14 நிமிடங்களில் தூய்மைப்படுத்தும் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,) நீல நிறத்திற்கு பதிலாக காவி நிறம் பூசப்பட்டதன் காரணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
“மனித கண்களுக்கு இரண்டு நிறங்கள்தான் மிகவும் தெளிவாக நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்தும் புலப்படும்.
அவற்றில் ஒன்று மஞ்சள், இன்னொன்று காவி நிறம். ஐரோப்பிய நாடுகளில் 80 சதவீத ரயில்கள் இந்த இரண்டு நிறங்களில் தான் இருக்கின்றன.ஒரு சில இடங்களில் சில்வர் நிறம் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் ஒப்பீட்டு அளவில் சில்வர் நிறத்தைவிட ஆரஞ்சு, மஞ்சள் நிறங்கள் தான் அதிக அடர்த்தியுடம் பார்வைக்குப் தெளிவாக தெரியும் என்பதால் இந்த நிறங்களை புதிய வந்தேபாரத் ரயில்களுக்குப் பயன்படுத்துகிறோம். ஆகையால் இதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை. 100 சதவீதம் அறிவியல்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.