நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த 3 சட்டங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்.
முதலாவது சட்டம், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டமாக இருக்கும்.
இதையும் படிங்க : தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை தொடரும் – தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தகவல்!
2வது சட்டம், உள்ளாட்சித் தேர்தல்களை மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது; இதற்கு 50% மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.
3வது சட்டம், புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பதவிக்காலத்தை மற்ற சட்டப்பேரவை பதவிக்காலத்துடன் ஒத்திருக்கும்படி மாற்ற இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.