தமிழ் நாடு சட்டபேரவையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இன்று மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசின் அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், வேளாண் நிதிநிலை அறிக்கையும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அவையில் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ,”மிகுந்த கனந்த இதயத்துடன் நின்றுகொண்டு உள்ளேன். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த வினோத் ரூ.17 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அரசிற்கு பொறுப்பு உள்ளது.
நான் கனத்த இதயத்தோடு இங்கு நின்று கொண்டிருக்கிறேன். “மாநிலத்தில் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்தார்.
இதுவரை ஆன்லைன் ரம்மிய தமிழ்நாட்டில் 41 பேர் உயிரிழந்தனர் . நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம் கண்ணுக்கு முன்னால் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய, ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.
மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் இதை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இனி ஒரு உயிர் பறிக்கபாடமல்., இனி ஒரு குடும்பம் நடுத்தெருவில் வராமல் இருக்க இந்த இணையவழி சூதாட்ட சட்ட முன்வடிவை சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி தர வேண்டும்.” என்றார்.
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு; இன்னும் தாமதப்படுத்தினால் சட்டமன்றத்தையும், மாநில மக்களையும் ஆளுநர் அவமதிப்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்தை அடுத்து, ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட முன்வடிவு மசோதா, சபாநாயகரால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் இது குறித்து, கோயம்பத்தூர் பாஜக சட்டமன்ற உறுபினர், வானதி ஸ்ரீநிவாசன் ரம்மியை தடை செய்யப்போவது உறுதி என்றும் தமிழக அரசோடு துணை நிற்போம் என்று தெரிவித்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது தொடர்பாக,அவர் அளித்த பேட்டியை பார்க்க :