ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகியோர் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் தினத்தை முன்னிட்டு வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட நிர்வாகிகள் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கம் அருகே பேரணியாக சென்று மொழி தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராயபுரம் மனோ மற்றும் மாவட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து செய்திக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
1967ஆம் ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,அறிஞர் அண்ணா போன்றவர்கள் இந்தி திணைப்பு ஆதிக்கம் அதிகமாக இருந்த வேளையில் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டனர் மேலும் பேரறிஞர் அண்ணா தமிழுக்காகவே வாழ்ந்து வந்தவர் மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றும் தெரிவித்தார்
தஞ்சாவூரில் உலக தமிழ் பல்கலைக்கழகத்தை புரட்சி தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்தார் எனவும் மேலும் உலகத் தமிழ் மாநாட்டை முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா உலகமே வியக்கும் வண்ணம் நடத்தினார் என குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அறிவியல் மூலமாக தமிழ் வளரும் என்ற வகையில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா உலக தமிழ் மாநாட்டை நடத்தியதாக தெரிவித்தார்.
எங்கள் ரத்தத்தில் தமிழ் தமிழ் என ஊறி இருப்பதாக கூறி தமிழை அழிக்கும் விதமாக தற்போது ஆளும் விடியா திமுக அரசு இருந்து வருவதாக குற்றச்சாட்டினார்அவ்வப்போது சசிகலா மீண்டும் அதிமுக என் வசம். என கூறி எப்பொழுதுமே தலைமறைவு ஆகி கொள்வார் என தெரிவித்தார்
”திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகிய மூவரும் இருந்து வருவதாக கூறினார்.
தற்போது இருக்கும் அதிகாரிகள் ஆளும் கட்சிகளுக்கு துதிப்பாடும் நிலைமை இருந்து வருவதாகவும் எதிர்காலத்தில் அதற்கு எல்லாத்திற்கும் பதில் சொல்லக்கூடிய நிலைமை ஏற்படும் எனக் கூறினார்.
தமிழக ஆளுநரையே இலக்காரமாக பேசக்கூடிய கேவலமான ஆட்சியை இந்த ஆளும் கட்சி நடத்தி வருவதாகவும் மேலும் தற்போது இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் ரவுடிகளை போல் கற்களை கையில் எடுத்துக் கொண்டு அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என குற்றச்சாட்டினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் எங்கள் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு இருந்து வருவதாகவும் அதனால் எந்த ஒரு வகையிலும் தேர்தலில் தோற்க மாட்டோம் அதிமுகவின் வாக்கும் மக்கள் வாக்கு மூலம் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
இரட்டை இலை என சின்னம் எங்களுக்கு பலமாக இருந்து வருவதாக தெரிவித்தார் திமுகவினர் சுண்டல் கடை பஜ்ஜி கடை பிரியாணி கடை என எந்த கடையும் விட்டு வைக்காமல் கல்லா கட்டி வருவதாக குற்றம் சாட்டினார். சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் உட்கட்டமைப்பு சுகாதார சீர்கேடு சாலை வசதி அனைத்துமே அதல பாதாளத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
கடந்த அதிமுக ஆட்சியின் திறமையான நிர்வாகத்தால் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருந்ததாகவும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை சரியாக பராமரித்தாலே சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை வைத்து திமுக வெற்றி பெற கனவு காண்பதாக தெரிவித்தார்.