நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு பெற்ற முத்தரப்பு t20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடிபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆளென், கான்வே 12 அமற்றும் 14 ரன்களில் வெளியேறினார்.
அணியின் கேப்டன் வில்லியம்சன், பிலிப்ஸ் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 38 பந்துகளில் வில்லியம்சன் அரைசதம் கடந்து அவுட் ஆனார். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சரிவயாக ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிறக்கு 163 ரன்கள் சேர்த்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதாமான ஆட்டத்தை மேற்கொண்டது அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் பாபர் அஸாம் 15 ரன்களில் அவுட் ஆனார் பின்னர் ரிஸ்வான் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 34 ரன்களில் ரிஸ்வான் வெளியேற பின்னர் வந்த நவாஸ், ஹைதர் அலி சிறப்பாக ஆடினார் 19.3 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து 168 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது .
நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெள் சிறப்பாக அபந்து வீசி 14 ரன்கள் குடுது 2 விக்கெட்டை கைபற்றினார். இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு t20 தொடர் கோப்பையை பாகிஸ்தான் அணி தட்டிசென்றது. நவாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார். இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை பிரேஸ்வெள் பெற்றுக்கொண்டர். முன்பு பாகிஸ்தானில் நடந்த t20 தொடரை இழந்த நிலையில். தற்போது முத்தரப்பு t20 தொடரை பாகிஸ்தான் வென்றுள்ளது கூறிப்பிடத்தக்காது.