கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில்,கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுத்தனர் ஆனால் வெறும் 10 பேருக்கு மட்டும் பட்டா கொடுக்கப்பட்டது.
விண்ணப்பம் செய்த பலருக்கு இன்று வரை பட்டா வழங்கவில்லை என்றும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. கோவை வடக்கு வட்டம் வீரபாண்டி கிராமத்தில் புறம்போக்கு இடங்கள் உள்ளது.அதேபோல் கோவை தடாக ரோட்டில் உள்ள KNG புதூர்,சின்ன தடாகம், வேலாண்டிபாளையம், துடியலூர், பன்னிமடை, கணுவாய்,ஆனைகட்டி போன்ற பகுதி சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்து இருந்தோம் பல பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.