உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது பொதுக்கூட்டத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார், அதனை பிரதமர் மோடி வாசித்து மகிழ்ந்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு பல்வேறு மாநிலங்களில் வாகன பேரணி மற்றும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு, முதல்வர் புஷ்கர் சிங் தாமி உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார். பரிசைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்த உடுக்கையை அடித்து மகிழ்ந்தார்.

அதன்பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்,ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் என்பதையும், அரசு எடுத்த முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

முத்தலாக்கிற்கு எதிரான சட்டம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, பொதுப் பிரிவு ஏழைகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது பாஜக ஆட்சியில் தான் என்றும் அவர் தெரிவித்தார்.