சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தொட்டத்தில் மயங்கிக் கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவ மனையில் அனுமதிருந்த நிலையில் அந்த நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் பெய்த மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெருவோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் இந்த மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் ஷெனாய் நகர் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்ற நபர் கனமழை காரணமாக கல்லறைக்குள்ளேயே தங்கி உள்ளார். கனமழை தொடர்ந்ததால் அந்த நபரரில் உடல் நிலை பாதிக்கப்பட்டு அந்த இடத்திலேயே மயக்கமாகி உள்ளார்.
அந்த நபரை பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, முறிந்து விழுந்த மரங்களை அகற்றி உதயாவை தனது தோளில் வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ராஜேஸ்வரியின் செயல் சமூக வலைதளத்தில் பாராட்டுக்களை பெற்று வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உயிருக்கு போராடிய உதயா என்பவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது