உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் அல்லு அர்ஜுனின் புஷ்பா – 2 திரைப்படம் நேற்று கோலாகலமாக வெளியான நிலையில் முதல் நாளிலேயே அபார வசூல் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் புஷ்பா என்ற படத்தின் மூலம் முதல் தேசிய விருதை பெற்ற தெலுங்கு நடிகர் என்ற அந்தஸதை பெற்றவர் அல்லு அர்ஜுன்.
சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வந்தது.
அல்லு அர்ஜுன் , ராஷ்மிக்கா மந்தனா , பாஹத் பாசில் , சமுத்திர கனி என ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நேற்று ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக வெளியானது.
மாஸான பன்ச் வசனங்களுடன் ஏராளமான ஆக்சன் காட்சிகள் நிரம்பியுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இப்படம் வெளியான நிலையில் முதல் நாளிலேயே அபார வசூல் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா – 2’ திரைப்படம், உலகளவில் ஒரே நாளில் 294 கோடி வசூலைக் குவித்துள்ளதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .
இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படம் என்ற சாதனையை படைத்துள்ளதாகவும் பட நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
