பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. அதன்படி நேற்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ‘பேட்’ செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவ, ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸில் 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.