சத்தியமங்கலத்தில் யூடியூப் பார்த்து நகைக்கடையின் சுவரில் துளையிட்டு திருட முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பத்ரிநாத் என்பவரின் நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. நள்ளிரவில் கடையின் பக்கவாட்டு சுவரில் மர்ம நபர் ஒருவர் துளையிட்டு நகைகளை திருட முயற்சிப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து பத்ரிநாத் அளித்த புகாரி அடைப்படையில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விச்சரனையில் நகை கடையில் திருடமுயன்ற இளைஞர் கரூர் மாவட்டம் மாயலூர் அருகேயுள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவர் மகன் ராஜபாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ராஜபாண்டியனின் கைபேசி சிக்னலை வைத்து போலீசார் தேடிவந்தனர். அப்போது புளியம்பட்டி வாரச்சந்தையில் சுற்றி திரிந்த ராஜபாண்டியனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் தனியார் நூற்பாலையில் வேலைசெய்து வந்ததாகவும், கடன் பிரச்சனையால் யூடியூப் பார்த்து திருட முயற்சித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடந்து ராஜபாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுதிய போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடன் தொல்லையால் யூடியூப் பார்த்து நகைக்கடையின் சுவரில் துளையிட்டு திருட முயன்ற சம்பவம் சத்தியமங்கலத்தில் பரபரப்பை ஏற்ட்படுத்தியுள்ளது.