திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது என அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
ஆக.15ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார். ஆனால் ஆளுநரின் விருந்தில் திமுக தலைவர், பொதுச்செயலாளர் இருவரும் கலந்து கொண்டனர்.
Also Read : அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை – கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் தாய் கதறல்..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம், நீங்களும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொன்ன உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
கலைஞர் நினைவு நாணயத்தில் இந்தி இடம்பெற்றுள்ளதற்கு திமுக உடன்படுகிறது. இதன்மூலம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
கலைஞர் நாணய விழாவிற்கு ராகுலை அழைக்காதது ஏன்? நாங்கள் பாஜக அணியில் இருந்தபோது கூட, பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை. சென்னையில் கருணாநிதி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.