142 வது அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் ஆகஸ்ட் 16 தேதி முதல் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியானது கிராண்ட் சலாம் அந்தஸ்து கொண்டதாகும். இந்த தொடரில் பல முன்னணி நாசத்திரங்கள், அறிமுக வீரர்கள் என பல தரபட்ட வீரர்கள் பங்குபெற்றுள்ளனர். இந்த போட்டி ஆடவர், பெண்கள் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் என இரு போட்டிகளும் நடைபெறுகின்றன.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் டென்னிஸ் உலகின் ஜம்பவானான செரீனா வில்லியம்ஸ் பங்கு பெற்றார். அவர் ஆஸ்ட்ரேலியாவின் டாம்ஜநோவிக்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் செரீனா 5-7,7-6,1-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
இந்த தோல்வியின் மூலம் செரீனா அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார். அதுமட்டுமின்றி அவர் இந்த போட்டியுடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.எனவே அவர் பங்கு பெற்ற கடைசி போட்டி இதுவாகும், இதற்கு முன்பு பெண்கள் இரட்டையர் பிரிவில் செறினாவின் சகோதரியான வீனஸ் வில்லியமுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய போட்டியிலும் வில்லியம் சகோதரிகள் தோல்வியை தழுவினர்.
ஒட்டுமொத்த டென்னிஸ் வாழ்க்கையில் செரீனா இதுவரை 23 கிராண்ட் சலாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்த என்னிக்கையை எட்ட ஆடவர் பிரிவில் யாரும் அருகில் கூட வரவில்லை. தனது 27 வருட டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து செரீனா இன்று விடைப்பெற்றார்.