தன்னுடைய போட்டோவை மார்ஃபிங் செய்து அசிங்கப்படுத்துவதாக சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் இன்ஸ்டாகிராமில் கதறி அழும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லட்சுமி.இது மட்டுமின்றி பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள சீரியல் நடிகை லட்சுமி, தன்னுடைய போட்டோவை சிலர் மார்ஃபிங் செய்து அசிங்கப்படுத்துவதாக கதறி அழுதபடி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் செப்டம்பர் 11ந் தேதி என்னுடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது அதில் உங்களுக்கு 5 லட்சம் லக்கி பிரைஸ் என்று போட்டிருந்தாகவும் அது என்ன என்று பார்க்க அந்த லிங்கை கிளிக் செய்த போது தன் போன் ஹாக்காகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடைய போனை ஹாக் செய்து, தன்னுடைய போனில் இருந்த அனைத்து நம்பர்களை எடுத்துக்கொண்டு, தன்னுடைய போட்டோவை தவறனா முறையில் அசிங்கமாக மார்ஃபிங் செய்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் அனுப்பி இருப்பதாகவும் மேலும் அவருடைய பெற்றோருக்கும் அவருடைய அசிங்கமான போட்டோ ஷேர் செய்யப்பட்டாதாக கூறி கதறி அழும் விடியோ தற்பொது சமுக வலைதளத்தில் பரவி வருகிறது.
இதுபோன்ற ஆன்லைன் லோன் ஆப்கள் பெண்களை குறிவைத்து அவர்களின் போட்டோக்களை அவர்களுக்கே தெரியாமல் மார்ஃபிங் செய்து அவர்களை மிரட்டி பணங்களை பறித்து வருவதாகவும், பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற ஆன்லைன் லோன் ஆப்களை தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருங்கள் துணிந்து இதுகுறித்து புகார் கொடுங்கள் என சைபர் க்ரைம் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
[embedyt] https://www.youtube.com/watch?v=z6vGEmUsoR4[/embedyt]