இறுதி ஊர்வலத்திற்கு வேறு சாலைகளை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி காட்டியுள்ளது.
விருதுநகரின் பனையப்பட்டி பகுதியில் இறுதி ஊர்வலத்தின்போது தெருக்களை பயன்படுத்தாமல், பிரதான சாலையில் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும் என கம்மவார் சமூக நல சங்கத்தின் செயலர் மகாலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பஞ்சாயத்துக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் போன்றவற்றை வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமென எந்த உரிமையும் இருக்க முடியாது. இந்த மனு பாகுபாடு காட்டுவதை ஆதரிக்கிறது எனவே இறுதி ஊர்வலத்திற்கு வேறு சாலைகளை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்வதுடன் மனுதாரருக்கு 25,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அனைவருக்கும் பொதுவான நீதிமன்றத்திலேயே குறிப்பிட்ட சமூகத்தினர் இறுதி ஊர்வலத்திற்கு வேறு சாலைகளை பயன்படுத்த உதவிராட கோரி மனு அளித்தது கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.