இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக 7,500 கோடி நிதியை கடனாக அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்தளம் பெரிதும் பாதிக்ப்பட்டுள்ளதால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக சமையல் எரிவாயு, சீனி, பால்மா, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அந்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதோடு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை அரசை கண்டித்து அந்தாட்டு மக்கள் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கிடையே இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியவிடம் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு கடனாக நிதி உதவி வழங்க இந்திய முடிவு செய்துள்ளது. அதன்படி அத்தியாவசியப் பொருட்களை பெற்றுகொள்வதற்காக 7,500 கோடி நிதி உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும் அத்தியவசிய பொருட்களும் இலங்கைக்கு வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமது ட்வீட்டர் பதிவின் ஊடாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.