இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Also Read : மகளிர் பிரீமியர் லீக் : ரூ.1.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீராங்கனை..!!
அதிபரான பின் முதல் வெளிநாடு அரசு முறை சுற்றுப்பயணத்தில் இந்தியா வந்துள்ள அநுரகுமார திசநாயகே, முதல் பணியாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேச உள்ளார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதுமட்டுமின்றி வேறு சில நிகழ்ச்சிகளிலும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.