தனியார் மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் பேண்டேஜை வைத்து மருத்துவர்கள் தையலிட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவொற்றியூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான எஸ்.எஸ்.எஸ். மருத்துவமனையில் பெண் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிரசவத்திற்காக அணுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. எல்லாம் நல்லபடியாக முடிந்து வீட்டிற்கு சென்றதும் அப்பெண்ணுக்கு தையல் போடப்பட்ட இடத்தில் அதிக வலி ஏற்பட்ட நிலையில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
Also Read : தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த நபர் சென்னையில் கைது..!!
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகப்பேறு அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் பேண்டேஜை வைத்து தேய்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹10 லட்சம் இழப்பீடு, சிகிச்சை கட்டணம் ₹3.26 லட்மும், செலவு ₹10,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இழப்பீட்டை 2 மாதங்களில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.