துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய லக்கி பாஸ்கர் படம் பார்த்து 9ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி விடுதியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய 2 கே கிட்ஸ் எதை பார்த்து நன்றாக கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ சினிமாவை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகள் , போதை பொருள் பயன்படுத்தும் காட்சிகள் , திருட்டு , மற்றும் ஏமாற்றி பணம் சம்பாரிப்பது என பல விஷயங்களை நன்றாக பார்த்து தெளிவாக தெரிந்துகொண்டு அதை அவர்களது சொந்த வாழ்க்கையில் நடைமுறை படுத்தியும் வருகிறார்கள். அப்படி ஒரு துயர சம்பவம் தான் ஆந்திராவில் நடந்துள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டொபர் மாதம் 31 ஆம் தேதி வெளியான திரைப்படமே லக்கி பாஸ்கர். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அமோக வரவேற்பை சந்தித்த இப்படம் வசூலிலும் எந்த குறையும் இல்லாமல் தூள் கிளப்பியது.
Also Read : விரைவில் ‘திமுக ஃபைல்ஸ் 3’ வெளியிடப்படும் – மீண்டும் பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!
இந்நிலையில் இந்த படத்தில் அதிக பணம் சம்பாரிக்க துல்கர் சல்மான் சில யுக்திகளை கையாண்டிருப்பார் அதை சினிமாவில் பார்க்க நன்றாக இருந்தாலும் நடைமுறையில் எவ்வளவு கடினம் என்பது அனைவர்க்கும் நன்றாக தெரியும்.
அண்மையில் ஆந்திராவில் இந்த படத்தை பார்த்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் படத்தில் வரும் ஹீரோ மாதிரி பணம் சம்பாதிப்பதாக கூறிவிட்டுச் பள்ளி விடுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள் மாற்றும் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.