கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பி வசூல் ரீதியாகிவரும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
Also Read : வெம்பக்கோட்டை அகழாய்வு – பீங்கானால் ஆன பழங்கால உருண்டை வடிவ மணி கண்டெடுப்பு..!!
இதையடுத்து தற்போது நடிகர் சூர்யாவின் 44 ஆவது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த படத்திற்கு ‘RETRO’ என பெயரிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸை ஒட்டி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது.
இதோ RETRO படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்..