தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் புதிய நிலக்கரிச் சுரங்கம் அமைக்க நிலக்கரி சுரங்க விவகாரத்தில் 3 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
என்.எல்.சி. நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்றும், கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்எல்சியால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (anbumani ramadoss) வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதி உள்ள கடித்ததில், கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்கள் விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட பல்வகை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்புகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
என்.எல்.சிக்கு எதிராக பாமக நடத்தியுள்ள போராட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கு அறிவீர்கள் என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் தங்களை வேளாண் பாதுகாவலராக நிலைநிறுத்துவீர்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.