Vaishali-அர்ஜுனா விருது மற்றும் துரோணாச்சார்யா விருதை பெற்ற வைஷாலி மற்றும் ஆர்.பி.ரமேஷ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது,
கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான் சந்த் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இன்று டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியும்,
தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனையுமான வைஷாலிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில்,அர்ஜுனா விருது மற்றும் துரோணாச்சார்யா விருதை பெற்ற வைஷாலி மற்றும் ஆர்.பி.ரமேஷ்,
சேப்பாக்கம் – திருவல்லிக்கேனி சட்ட மன்ற உறுப்பினரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.
இளம் வயதில் அர்ஜுனா விருது பெற்ற வைஷாலி-விற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
Also Read :https://itamiltv.com/distribution-of-rs-1000-to-public-received-on-demand-of-udayanidhi/
இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:
விளையாட்டுத்துறையில் தலைசிறந்து விளங்கும் வீரர் – விராங்கனையருக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகள், குடியரசுத் தலைவர் அவர்களால் டெல்லியில் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளைப் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சகோதரி @vaishalichess – செஸ் பயிற்சியாளர் திரு.ஆர்.பி.ரமேஷ் மற்றும் #FIDE Chess Candidates Tournament 2024-ல் பங்கேற்கவுள்ள தம்பிகள் @chessprag – @DGukesh ஆகியோரையும் இன்று நேரில் வாழ்த்தினோம்.
விளையாட்டுத்துறையில் அவர்கள் இன்னும் பல உயரங்களைத் தொட என்னுடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read :https://x.com/Udhaystalin/status/1745023466796179616?s=20
கிராண்ட்மாஸ்டர் பட்டம்:
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற 84-வது நபர் வைஷாலி ஆவார். அதேவேளையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலில் வைஷாலி (Vaishali)25-வது இடத்தை பிடித்துள்ளார்.
வைஷாலி ஏற்கனவே அவரது சதுரங்கப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ள நிலையில், மற்றொருமாரு அங்கீகாரமாய்,
அர்ஜூனா விருதை பெற்று தமிழகத்துக்கு புகழ் சேர்த்துள்ளார். இவருடைய சகோதரான பிரக்ஞானந்தா கடந்த ஆண்டிற்கான அர்ஜூனா விருதை பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.