தமிழ்நாட்டில் கொரோனா( Corona) பாதிப்பு இன்று ஒரே நாளில் 156 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா (Covid)தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில், நேற்று 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இன்று எண்ணிக்கை உயர்ந்து 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் இன்று மட்டும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.மேலும் இன்று மட்டும் சென்னையில் 43 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும், கோயம்புத்தூரில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.