ஆயிரம் காலத்து பயிராக, ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிராக அற்புத சக்தியாக அதிமுக விளங்குகிறது என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இயக்கம் கட்சி 30ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பெருமை பெற்ற அதிமுக தான்.இந்த இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என க் கொண்டு இருந்த எதி ர்காலத்தில் தான் எதிர்கொண்டு நான் இருக்கிறேன் கழகத்தை காவல் தெய்வமாக இருந்து காத்த அம்மா அவர்கள், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியாக உருவாக்கி தந்தவர் அம்மா அவர்கள்.
இந்தத் தொண்டர்கள் தான் இயக்கத்தின் உயிர் நாடி, ஆணிவேர். நீங்கள் தான் இயக்கத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதனால்தான் யார் தலைமைக்கு வர வேண்டும் என்ற தேர்வு செய்யும் உரிமையை தொண்டர்களுக்கு தந்து இருக்கிறார்கள். உங்களுக்காக புரட்சித்தலைவர் கொண்டு வந்த அந்த சட்டவிதி, அம்மா அவர்கள் தொடர்ந்து பாதுகாத்து யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வழி நடத்தினார்கள்.
கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தலைவி அம்மா தான் என உண்மையான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம், அதற்குப் பின்னால் வந்த கபடி வேடதாரி அரசியல் வியாபாரிகள், அரசியல் வியாபாரத்திற்காக, நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் அதனை மாற்றுகின்ற வகையில் உள்ளார்கள்.
மூன்றாவது முறை சின்னம்மா அவர்கள் தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள், திரும்ப கேட்டார்கள் நான் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.பொதுச் செயலாளர் இந்த அந்தஸ்தை நீங்கள்தான் வழங்கினீர்கள், அதனை நீக்கும் வகையில் கல்நெஞ்சகாரர்களாக இன்று ரத்து செய்துள்ளார்கள். அவர்களை ஓட ஓட விரட்டும் காலம் வெகு தூரத்திற்கு இல்லை.
பன்னீர்செல்வத்தை தொண்டனாக பெற்றதில் நான் செய்த பாக்கியம் என அம்மா சொன்னார்கள், அம்மா அவர்கள் கொடுத்த பட்டத்தை தான் அம்மா அனுப்பு முதலமைச்சர் நிதி அமைச்சர் தலைவர் என்ற பதவியை அம்மா தந்துள்ளார்கள்.
கழகத்தின் விதியை வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் தற்போது ஆடிக்கொண்டிருக்கிறார்கள், கழகத்தின் நிதியை தவறாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
எனக்கு வழங்கிய பதவியை நான் திருப்பி கொடுத்து விட்டேன், பழனிச்சாமி அய்யா உங்களுக்கு யார் பதவி கொடுத்தது, சின்னம்மா அவர்கள் உங்களுக்கு முதலமைச்சர் என்ற பதவி தந்தார்கள்.நான் உண்மையை ஒறுத்துக் கொள்ள வேண்டும் அவர்களைப் பார்த்து நான் எதையோ பார்த்து குறைக்கிறது என சொல்லுகிறாய் என்றால் நீ எவ்வளவு பெரிய துரோகி, உலகம் மன்னிக்குமா.
உங்களில் ஒருவரை கழகத்தில் தலைமையாக நியமிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது, தொண்டர்களோடு தொண்டராக தோள் கொடுக்கும் வகையில் என்றைக்கும் இருப்பேன்.புரட்சித் தலைவர் என்றால் ஒரு அடையாளம் கண்ணாடிக்கு அழகு சேர்ப்பது எம்ஜிஆர் தான், அதை போட்டுக் கொண்டு கேமராவில் போஸ் கொடுக்கிறாயே எவ்வளவு பெரிய அநியாயம், அக்கிரமம். நீயும் புரட்சித் தலைவரும் ஒன்றல்ல அவரது கால் தூசிக்கு வரமாட்டாய்இந்த திருச்சி தான் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 2011ல் தீர்மானித்த நகரம் இது.
கழகத்தின் சட்ட விதியை மாற்றி, கோடிக்கணக்கில் பணத்தை குவித்து வைத்துக் கொண்டு தலைமை கழக நிர்வாகிகளை விலைக்கு வாங்கிக்கொண்டு, பொதுச் செயலாளர் சட்ட விதி மாற்றிவிட்டது என்பது எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவிக்கு செய்த பச்சை துரோகம். இவ்வளவு பெரிய துரோகத்தை செய்தவர்களை இருக்க விடலாமா என தொண்டர்கள் நீங்கள் முடிவு செய்யுங்கள்.
இது மக்களுக்கான மற்றும் தொண்டர்களுக்கான இயக்கமாக கொண்டு செல்வதுதான் நோக்கம், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கட்சி செயல்பட வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது.இந்த ஜி-கார்னர் இடம் ரொம்ப ராசியானது, அம்மா கூட்டம் நடத்திதான் முதலமைச்சர் ஆக வருவதற்கு விதை போட்ட நகரம்.சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வருவதற்கான யுத்தம் தற்போது நடைபெற்று வருகிறது, அதற்கு ராசியான இடம் இந்த ஜி கார்னர் தான்.
தொண்டர்களுக்கான இயக்கத்தை பெற்று தர இந்த யுத்தத்தை விதையை இன்று திருச்சியில் ஆரம்பித்து இருக்கிறோம், அதை காயாக்கி மரமாக்கி தொண்டர்களுக்கு தருவோம்.இந்த இயக்கத்தை உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் தலைமைக்கு வரவேண்டும் என சட்ட விதியை திருத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு சாவுமணி அடிப்போம், உங்களை நம்பித்தான் இந்த யுத்தத்தை தொடங்கியுள்ளோம்.
ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள், தனி நபரின் கைக்குள் இந்த இயக்கம் இருக்கக் கூடாது.2000 கேடிகளையும், ரவுடிகளையும் மண்டபத்தில் உட்கார வைத்துக்கொண்டு பொதுக்குழுவா நடத்தினீர்கள்? அராஜகம் திட்டமிட்டு நடத்தப்பட்டது, அதே நேரம் லூசு சிவி சண்முகம் 23 தீர்மானம் ரத்து செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பணத்திமிர்… இதனை அடக்கி ஒடுக்கி தானாக பாதையில் கட்சியை கொண்டுவர தொண்டர்கள் இருக்கிறார்கள்.
ஜெயக்குமார் ஒரு லூசு… அந்த லூசு சொல்லுது ஓ பன்னீர்செல்வம் தனியே இருந்து டீ ஆத்திக்கொண்டு இருக்கிறார்… இங்கு உள்ள தொண்டர்களை பாருங்கள், இது 35 மாவட்டங்களில் இருந்து வந்த கூட்டம் இது, எஞ்சி உள்ள மாவட்டங்கள் கூடுகின்ற மாநாடு விரைவில் நடக்கும்.