மாறி வரும் பழக்க வழக்கங்கள் பல வழிகளில் நல்லதாகவே இருந்தாலும் சில வழிகளில் தீமை
விளைவிக்கிறது.
இதில் முக்கியமாக மாறி வரும் பல விஷயங்கள் ஹெல்த் எனும் கோணத்தில் பார்க்கும்போது நீண்ட நாள் தொடரும் விளைவுகளை மனிதரில் ஏற்படுத்துகிறது. இப்போதைய வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் பொதுவாகக் காணப்படும் பிரச்சனை உடல் பருமன். ஜெனெடிக் காரணத்தைத் தாண்டி உடலுக்குப் போதுமான உடற்பயிற்சியின்மை ,தூக்கமின்மை, மாறுபட்ட அதிக கலோரி உணவு முறை, உணவு கட்டுப்பாடின்மை போன்ற சில காரணங்களால் உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது.
கலோரி குறைந்த உணவுகளைச் சாப்பிடவது என்று. உடற்பயிற்சி செய்வது, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றினாலே நாளைடைவில் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் பலரும் உடல் எடையை உடனே குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய கூட தயாராக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : உயிருக்கு ஆபத்தான ஸ்மோக் பிஸ்கட் … ட்ரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை….
இப்படி உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்து முடிவெடுத்து அதற்காக அவர் கொடுத்த விலை தான் அவரது உயிர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி.நகரைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன், பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ள இவர் உடல் பருமன் காரணமாக, சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக அறிவுரைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரது தேவைகளைக் கேட்டறிந்த மருத்துவர்கள், கொழுப்பு நீக்கச் சிகிச்சை செய்யலாமென ஆலோசனை சொன்னதாகக் கூறப்படுகிறதுது. இந்தச் சிகிச்சை மூலம் எளிதில் உடல் பருமனை குறைத்து விடலாம் என நினைத்த ஹேமசந்திரன் அறுவை சகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்.அதன் படி, அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஹேமசந்திரன் இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன் இறந்துவிட்டதாகக் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சென்னை பம்மல் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்