மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வைகோ கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொடி ஏற்றி தலைமை அலுவலகத்தில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் தொடர்ந்து இனிப்புகளை வழங்கி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
நிகழ்ச்சிக்குன்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, மாவட்டச் செயலாளர் ஜீவன், கழககுமார், சுப்பிரமணியன்,எம்.எம் பாபு உள்ளிட்ட பகுதி கழகச் செயலாளர் மாவட்ட மாநில நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வைகோ கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது பட்டாசு வெடித்து பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்த வைகோ, பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு ஏழை எளிய மக்களுக்கு தர்பூசணி மோர் அன்னதானம் ஆகியவற்றையும் கொடுத்தார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ :
மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள் என வைகோ தெரிவித்தார்.
இனி வருகிற சோதனைகள் அனைத்தையும் முறியடித்து மதிமுக வெற்றி கொடியை நாட்டுவோம் என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.தமிழக ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கு பதில் அளித்த வைகோ, காவல்துறையில் காலாவதியான மனிதர் தமிழகத்தில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார் என காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வைகோ தமிழக ஆளுநர் பேசுவது உளறல் மேல் உளறாலாக உள்ளது.அவர் ஆளுநர் பதவிக்கு லாயக்கு அற்றவர்.ஆளுநர் பதவியில் இருக்க ஆர்என் ரவிக்கு எந்த தகுதியும் இல்லை அவர் வேண்டுமானால் பிஜேபி இந்து அமைப்புகளுக்கு பிரதிநிதியாக இருக்கலாம்.
இந்தியாவில் இதுவரை எந்த ஆளுணரும் இது போன்ற தவறுகளை செய்தது கிடையாது.திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இதுவரை இல்லாத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது என புகழாரம் சூட்டினார்.
மதிமுகவில் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த வைகோ, மதிமுக வின் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ஆடிட்டர் மூலமாக முறையாக தணிக்கை செய்யப்பட்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சியை தன் சொத்து பட்டியல் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது மதிமுக மட்டும் ஏன் வெளியிட வேண்டும் எனவும் பதில் கேள்வி எழுப்பியுள்ளார் .