கோவையில் வீட்டிலேயே கஞ்சா வளர்த்து புகை விட்டு எதிர்காலத்தை கருக்கி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொங்கு மண்டலா தேசமான கோவையில் வெளியே கஞ்சா வாங்குவது ரிஸ்க் ஆகிவிட்டதால், தங்கும் அறையிலேயே கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா வளர்த்து வந்துள்ளனர்.
ஒருபக்கம் போதைப்பொருள் இல்ல மாநிலமாக தமிழகத்தை உருவாக்க தமிழக அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்து வரும் நிலையில் போதை பொருளின் புழக்கமோ நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.
Also Read : போறபோக்கை பார்த்தல் தமிழகம் போக்சோ மாநிலமாகிவிடும் – பொன்.ராதாகிருஷ்ணன்..!!
இதனை கட்டுப்படுத்த போலீசார் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர் . அந்தவகையில் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கல்லூரி மாணவர்களான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேரை வீட்லேயே கஞ்சா வளர்த்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.