Tenkasi Agastheeswarar Temple History : இன்று நாம் காண இருக்கும் திருத்தலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற ஊரில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயம்.
இவ்வூருக்கு இப்பெயர் வர காரணமாக இங்குள்ள மக்கள் கூறும் காரணம், சாம்பவர் வடபகுதியிலும் அகஸ்தீஸ்வரர் தென்பகுதியிலும் இருந்து ஈசனை வழிபட்டதால் இப்பெயர் வந்தது என்கிறார்கள்.
இக்கோவிலை உருவாக்கியவர் அகஸ்தியர். ஈசனின் திருமணத்தால் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்து பூமி சமநிலை இன்றி இருந்தபோது சிவனார் அகத்தியரை தென்பகுதிக்கு அனுப்பி உலகை சமநிலைப்படுத்தும் படி உத்தரவிட்டார். அவரின் ஆணைப்படி தென்பகுதி வந்து அகத்தியர் உலகை சமநிலைப்படுத்துகிறார். பின் திரும்பும் வழியில் இவ் ஊரில் ஈசனின் ஈர்ப்பு இருப்பதை அறிகிறார்.
அதன் விளைவாக இங்குள்ள லிங்கத்தை அவரின் திரு கரங்களாலேயே படைத்து வழிபடுகிறார். அதன் காரணமாக இங்குள்ள சிவனை அகஸ்தீஸ்வரர் என அழைக்கின்றனர். லிங்கத்தைப் படைத்த அகத்தியர் சில காலம் இங்கேயே தங்குகிறார். அப்போது அனுமனும் ஜாம்பவானும் இவ்வழியே வருகின்றனர். வந்தவர்கள் அகத்தியரை கண்டு அவர்களும் தங்குகின்றனர்.
இதையும் படிங்க : திருவீழிமிழலை கோவில்.. நகைகள் வீட்டில் குவியும்.. திருமணம் நடக்கும்!!
அப்போது ஜாம்பவானும் அகத்தியரும் சந்தியா வந்தனம் செய்ய நீர் இல்லாத காரணத்தால் நீர் வேண்டுமென அனுமனை கேட்க.. அனுமன் தன் வாலால் கோடிட்டு ஒரு நதியை உருவாக்குகிறார். அதுவே அனுமன் நதி என ஓடிக்கொண்டிருக்கிறது.
கோவிலின் மறுபுறம் அகத்தியர் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இக்கோவிலின் அழகையும் சிறப்பையும் பற்றி இங்குள்ள மக்கள் கூறுவதை கேளுங்கள்..
சாம்பவர் வடகறையில் உள்ள அகத்தியரின் ஆசி உங்களுக்கும் கிடைக்க வேண்டுமென ஐ தமிழ் தாய் சார்பில் வேண்டிக்கொண்டு மீண்டும் ஒரு ஆன்மீக திருத்தல வரலாற்றுடன் வருகிறோம்.. நன்றி வணக்கம்! (Tenkasi Agastheeswarar Temple History : )