7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில், கடைசிக் கட்ட தேர்தலுக்கான ( final phase of voting ) வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 486 தொகுதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.
Also Read : வெப்ப அலையால் பீகாரில் 19 பேர் உயிரிழப்பு..!!
இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ( final phase of voting ) வாக்கு பதிவின் போது எந்த வித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என்பதற்காக ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.