திரையரங்குகளில் பல வாரங்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அமரன் படக்குழு பிரம்மாண்ட வெற்றி விழாவுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் மிடுக்கான கதைக்களத்துடன் உருவான திரைப்படமே அமரன் .
சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்களின் துணிச்சல் மிகு நடிப்பில் தயாரான இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது .
இப்படம் வெளியான நாள் முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது .
இந்நிலையில் அமரனின் வெற்றியை படக்குழு பிரம்மாண்ட வெற்றிவிழாவாக கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அடுத்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக வெற்றி விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அமரன் படக்குழுவினருக்கு கேடயம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.