தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்துகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து தொடங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் கட்டமாகப் பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம் சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருப்பதால், இலவசப் பேருந்து எது, கட்டணப் பேருந்து எது என அடையாளம் காண்பதில் சில இடங்களில் முதியோர்கள் குழப்பம் அடைந்தனர் . இதனால், நடத்துநருடன் வாக்குவாதம் ஏற்படும் சம்பவங்களும் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ,சென்னையில் பெண்களுக்கான இலவச ‘பிங்க’ நிற பேருந்து இன்று தொடங்கப்படுகிறது. பெண்களுக்கான இலவச மாநகரப் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் ‘பிங்க’ நிறம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் தொடக்கத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ளப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தமிழக அரசு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் வசதி ஏற்கெனவே அமலில் உள்ளது. ஆனால், அவசர அவசரமாக சில பெண்கள் சொகுசு பேருந்து அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் ஏறுகின்றனர்.
எனவே இந்த குழப்பத்தைப் போக்கும் வகையில், இலவச சீட்டுகளுடன் பெண்கள் பயணம் செய்யும் சாதாரண கட்டண பேருந்தின் நிறத்தை அரசுப் போக்குவரத்துத் துறை மாற்றியுள்ளது. இளஞ்சிவப்பு பெண்களின் பாலினத்தைக் குறிக்கிறது; இதனால், பேருந்துகள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘பிங்க’ நிற பேருந்துகள் இயக்கத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.