சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் மாணவி உறுதியாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவனை கைது செய்துள்ள போலீசார் அவனின் பின்னணி குறித்து தொடர்ந்து அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் மாணவி உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : ஆண்டுக்கு 40 லட்சமா..? பானி பூரி வியாபாரிக்கு பறந்த GST நோட்டீஸ்..!!
செல்போன் அழைப்பில் ‘மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்’ என ஞானசேகரன் யாருடனோ பேசியதாக மாணவி தகவல் தெரிவித்துள்ளதாகவும் போனில் இருந்த பழைய வீடியோவில் ஞானசேகரனுடன் திருப்பூரை சேர்ந்த ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை விசாரிக்க காவல் துறையினர் திட்டம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.