நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை. 6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக ( NEET ) புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை நீட் தேர்வில் பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் இருந்து இதற்கு வலுவான குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் கொடுத்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி கூறியதாவது :
நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை .நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கிறோம்
முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் . தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது
கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்
6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. புகார்கள் ( NEET ) குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.