நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசை நோக்கி திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகளை பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
“தமிழ்நாட்டு மக்கள் ’40/40′ என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது – “நாடாளுமன்றத்துக்குச் சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?” என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர்களெல்லாம் வாயடைத்துப் போகும் அளவிற்குத் திமுக எம்.பி.க்களின் செயல்பாடு அமைந்துள்ளது”
இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை.
இரயில்வே திட்டங்கள்.
மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது.
விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை.
விவசாயிகளுக்கான பி-எம். கிசான் திட்டத்தின்கீழ் போதிய நிதி ஒதுக்காதது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல்.
சுங்கச்சாவடிகளை ஒழித்தல்
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை.
நீதித்துறையில் பன்முகத்தன்மை கோரிக்கை.
சிறுபான்மையினர் பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய கோரிக்கை.
சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நாடாளுமன்றக் கண்டனத் தீர்மானம்.
நீட் தேர்வு முறைகேடுகள்
வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு
தமிழ்நாட்டின் விமான நிலையத் திட்டங்கள்.
இந்திய சீன எல்லைப் பிரச்சினை பற்றி வெள்ளை அறிக்கை கோரியது.
சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத்.
பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை.
மதுரை எய்ம்ஸ்
நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி – தினக் கூலியையும் உயர்த்துவது.
அகழ்வாராய்ச்சிக்குத் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை.
இப்படி எண்ணற்ற திட்டங்களை – தமிழ்நாட்டின் உரிமைகளை – எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய திமுக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது .
Also Read : “அவ்ளோதான் முடிச்சி விட்டாங்க போங்க” 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்..?
அவையில் பாஜகவினரால் ஜனநாயகம் படாத பாடுபட்டபோது மோடி வேடிக்கை பார்த்தார் பதில் சொல்லியே ஆக வேண்டிய அனைத்திலும் பிரதமர் கனத்த மவுனம் காத்தார் அரசின் தோல்வி விவாதமாகக்கூடாது என்ற நோக்கத்தில் பாஜக எம்பிக்கள் செயல்பட்டனர்.
நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது பா.ஜ.க. ஆட்சியின் கையில் “நாடாளுமன்ற ஜனநாயகம்” எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி.
அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது, அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது.
ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா, இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.