உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .
இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டியில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அதிகாரபூர்வமாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதம் இருக்கும் அணிகள் அரையிறுதி வாய்ப்பை எட்டிப்பிடிக்க முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது .
இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் 39 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ல் வெற்றி பெற்று 2 ல் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.
அதேபோல் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 4 ல் வெற்றி பெற்று 3 ல் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
நடப்பு உலக கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கன் ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.