இங்கிலாந்து ,பிரான்ஸ் , ஸ்பெயின் , ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் பல உள்கட்டமைப்புகள் வெப்பத்தினால் அறுக்கும் படங்கள் சமூகவலை தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தருகிறது.
2019ம் ஆண்டு லண்டன் மாநகரம் அதன் உட்சபட்ச வெப்பநிலையான 38.7 டிகிரி செல்சியஸை எட்டியது.
தற்போது வீசிவரும் வெப்ப அலையானது அந்த புள்ளியை கடந்து 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இத்தகைய வரலாறு காணாத வெப்பத்தால் இங்கிலாந்து நாட்டில் பல உள்கட்டமைப்புகள் உருகும் படங்கள் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள ஒரு ரெயில்வே சிக்னல் கடும் வெப்பத்தால் உருகியது. சமூக வலைதளத்தில் இந்த படம் பதிவிடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையங்களின் மேல்நிலை கம்பிகள், தடங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் சேதமடைந்ததால், இங்கிலாந்து முழுவதும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் ரெட் அலர்ட் விடப்பட்ட லண்டன் நகரில் ,முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் இது குறித்து மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் எனவும் இதனனை தொடர்ந்து உணவு ,பார்பிக்யு போன்ற உணவுகளை பொது வெளியில் சமைப்பதை தவிர்க்க வேண்டும் என அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.