விஜய் இல்லை அவரை போல இன்னும் நூறு ஹீரோக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வாகை சந்திரசேகர் கூறியதாவது :
உலகில் மிகப்பெரிய நடிகர் பிரதமர் மோடி. தமிழ்நாடு வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு பாரதியார் திருவள்ளுவர் என பேசுவார். பின்பு டெல்லி சென்று தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் ஒழிக்க வேண்டும் என எண்ணுவார்.
Also Read : துருவ் விக்ரமின் ‘பைசன்’ பட பர்ஸ்ட் லுக் வெளியானது..!!
ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையால் வட மாநிலங்களில் பல மாநிலங்களில் தாய் மொழி முற்றிலும் அழிந்து வருகிறது. இதனால் அங்கு கல்வி கற்கும் சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த், கமலஹாசன் என ஏராளமான நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர் திமுக நடிகர் எம்ஜிஆரை பார்த்த கட்சி விஜய் இல்லை இன்னும் நூறு ஹீரோக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
இங்கு கலைஞர் ஸ்டாலின் உதயநிதி என மூன்று ஹீரோக்கள் உள்ளனர் விஜய் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார் என நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.