திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத் தலைவரான பட்டியலின பெண்ணை சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திமுக அரசின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன் கூறியதாவது :
தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார் மேலும் சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் அவர் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார் ஆனால் இங்கு நடப்பதோ வேறு ….
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு கூட அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை..தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.