வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் .
கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள 6 கிராமங்கள் தடம் தெரியாமல் காணாமல் போனது .
கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் அங்கிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1000 கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தும் பலர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
Also Read : இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேற்றம்..!!
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்ப்பட்ட இந்த துயர சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக ராணுவம், தேசிய பேரிட மீட்பு படையினர், கேரள மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், தன்னார்வலர்கள் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் .