டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அந்த அணியின் கேப்டன் ரஷித்கான் இந்த தொடர் குறித்து உருவாகாமக பேசியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள Brian Lara Cricket மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித்கான் கூறியதாவது :
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அரையிறுதியில் தோல்வி அடைந்தது ஒரு அணியாக எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
SA அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இந்த தொடர் முழுவதும் புதிய பந்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டார்கள்.
இது ஒரு தொடக்கம்தான், எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மிடில் ஆடரில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த டி20 உலக கோப்பை தொடரை மறக்கவே முடியாது. அணியில் உள்ள ஒவ்வொருவரும் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். எங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
நாங்கள் எங்களை மேலும் வலுவாக கட்டமைத்துக் கொண்டு மீண்டும் அதிக பலத்துடன் திரும்புவோம். எங்களை நம்பிய மற்றும் ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி என ரஷித்கான் உருக்கமாக கூறியுள்ளார்.