கேரளாவில் PFI அமைப்பினர் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கற்கள் வீசிய சனோஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு நபரை போலீசார் தேடிவருகின்றனர். போராட்டத்தை வன்முறையாக மாற்ற இந்துத்துவ அமைப்பினர் முயற்சித்து வருவதாக PFI அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் நடந்த NIA சோதனையை கண்டித்தும், அவ்வமைப்பின் தலைவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், PFI அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்த முழு கடையடைப்பின் போது, பந்தளத்தில் பேருந்து மீது கற்களை வீசிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரிபாட் செருதாலா பகுதியைச் சேர்ந்த சனோஜ் என்பவரை போலீஸார் நேற்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.
சம்பவத்தன்று காலை 6.40 மணியளவில் பந்தளத்திலிருந்து பெருமானுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்கள் வீசினர். இந்த தாக்குதலில் பேருந்து ஓட்டுநரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. ஸ்கூட்டரில் வந்த இருவர் கற்களை வீசியதாகவும், அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பேருந்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சனோஜ், ஸ்கூட்டரின் பின் இருக்கையில் இருந்து பேருந்தின் மீது கற்களை வீசியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஸ்கூட்டர் ஓட்டியவரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து விசாரிக்கப்பட்டதில், தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்துத்துவ அமைப்பினரின் தூண்டுதலின் பேரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டத்தை வன்முறையில் ஈடுபடுவதை போன்று திசை திருப்புவதற்காக கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக PFI அமைப்பின் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.