உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் இன்று கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகளாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறும் இந்த தொடர் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது .
அனல் பறக்க நடைபெறும் இந்த தொடரில் சீனாவின் டிங் லிரேனுடன் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மோதுகிறார் .
Also Read : கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் – மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி
138 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் எதிரெதிரே மோதுகின்ற நிலையில் இதில் யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக நிரம்பி நிற்கிறது.
செஸ் விளையாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பல வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை படைத்து வரும் நிலையில் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வென்று சாதனை படைக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.