பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் யோகி பாபு மகள் பிறந்தநாள் விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரலாக வலம் வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது கரண்ட் ட்ரெண்டில் காலகாப்பான நகைச்சுவைக்கு நாயகனாக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் யோகிபாபு மகளின் முதல் பிறந்தநாள் விழா நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடபட்டது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி , விஷால் உளப்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.