ஆஸ்ட்ரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 என்ற நிலையில் தொடரை கைபற்றிய ஆஸ்ட்ரேலியா நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியது இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் செய்தது.
ஆஸ்ட்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர், பிஞ்சும் களமிறங்கினர். சற்றும் எதிர்பாராத விதமாக ஆஸ்ட்ரேலிய அணியின் விக்கெட்களை ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்கள் மலமலவென சரித்தனர். டேவிட் வார்னர் மட்டும் தாக்கு பிடித்து ஆடி 94 ரன்கள் சேர்தார் மெக்ஸ்வெல் 19 ரன்கள் சேர்தார். இவர்களை தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கு ரன்களில் வெளியேறினர்.
அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனான ஸ்மித் 1 ரன்னும், பின்ச் 5 ரன்களும், ஸ்டொய்னிஸ் 3 ரன்களிளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் சுழல் பந்து வீச்சாளர் ரையன் பேர்ல் 5 விக்கெட்களை கைபற்றி ஆஸ்ட்ரேலியாவின் ஆதிக்கத்தை ஆட்டம் காண செய்தார். பிராட் எவன்ஸ் 2 விக்கெட்களை கைபற்றினார், மீதமுள்ள பவவுளர்கள் தலா 1 விக்கெட்டை கைபற்றினர். இறுதியில் அந்த அணி 31 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
142 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆட தொடங்கிய ஜிம்பாப்வே அணி நிதமான ரன் குவிப்பில் ஈடுப்பட்டது. தொடக்க வீரர்கள் கைடனோ, மறுமணி சிறப்பான தொடக்கம் அமைத்தனர், பிறகு வந்த வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற கேப்டன் சக்பாவா நிலைத்து நின்று ஆடிஅணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 39 ஓவர்களில் 142 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே அணி ஆஸ்ட்ரேலியா அணியை அதன் மண்ணில் வெற்றி கொள்வது இதுவே முதன்முறையாகும். தொடரை இழந்தாலும் ஆறுதல் வெற்றியோடு வரலாறு படைத்துள்ளது ஜிம்பாப்வே.