திமுக அமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில், “நான் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்லை.. ஒரு வெள்ளைக்காரன் வெளியில இருந்து வந்தவனுக்கு இந்த மண்ணின் மாண்பை மதிக்கக்கூடிய பேராண்மை இருந்தது. ஆனால், எம்ஜிஆர் என்ற அந்த லூசுக்கு அது இல்லையே” என பேசியுள்ளார்.
இதையும் படிங்க : January 31ST 2024 : இன்றைய ராசி பலன்!!
சி.ராஜகோபாலாச்சாரி மற்றும் கே.காமராஜருக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்ற தமிழகத்தின் மூன்றாவது முதலமைச்சரான எம்ஜிஆர் குறித்து ஆ. ராசா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆ,ராசாவின் இந்த பேச்சிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள்ள எக்ஸ் தலைப்பதிவில்,
“இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
அன்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற மாண்புமிகு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து,
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை, அவர் பேசிய பாணியில்,
அவரைப் போல் அல்லாமல், பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த திமுக அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது .
இந்த விடியா திமுக ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் ,
கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும்,
உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.
இதையும் படிங்க : சத்திய பிரதா சாகுவின் அடையாள அட்டை காணவில்லை – கோட்டை காவல் நிலையத்தில் புகார்!
வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன.
அதே போல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
“கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்” எனத் தெரிவித்துள்ளார்.