அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளாா்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படும்.
கடந்தாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மற்றும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் தொகுப்புகள் பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : https://itamiltv.com/government-bus-drivers-protest-in-coimbatore-90-buses-operated-using-temporary-drivers/
முதலில் பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதேபோல இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கபட்டது. அதற்காக ரூ.238 கோடியே 92 லட்சத்து 72,741 நிதி ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து அரசியல் கட்சிகள் சார்பாக பொங்கல் பரிசு தொகை 2000 முதல் 5000 ரூபாய் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் எழுந்தது.
https://x.com/ITamilTVNews/status/1744654216579424405?s=20
மேலும் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளாா்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்குவதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தொிவித்துள்ளது.