மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 9)
மேஷம் :
உற்சாகமான நாள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
அம்பிகையை வழிபடுவது நன்று.
ரிஷபம் :
கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.
பிப்ரவரி 9 : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!!
மிதுனம் :
கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படும். சகோதர வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சஞ்சலங்கள் தீரும்.
கடகம் :
வீண் செலவுகள் மனஉளைச்சலை ஏற்படுத்தலாம். அவசிய தேவை என்றாலும் கூட கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
சிவபெருமான் வழிபாடு சிரமங்களை குறைக்கும்.
சிம்மம் :
நினைத்த காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
இன்று மிகவும் உற்சாகமான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
எதிலும் பொறுமையுடன் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
காஞ்சி காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்.
முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு :
புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு மிகச் சிறப்பான நாள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
மகரம் :
இன்று உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை அமோகமாக. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும்.
துர்கை வழிபாடு வெற்றிகளை குவிக்கும்.
கும்பம் :
இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
அம்பிகை வழிபாடு நன்மை சேர்க்கும்.
“என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்…” – நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!
மீனம் :
இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி உண்டாகும் (2024 February 9).