மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 March 8)
மேஷம் :
குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.
மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : சிவப்பு
ரிஷபம் :
தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : பழுப்பு
மிதுனம் :
புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : பச்சை
கடகம் :
வாழ்க்கைத் துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யவும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படக் கூடும்.
பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : செம்மஞ்சள்
International Women’s Day : சமூகத்தின் சரிபாதி பெண்கள்.. முதல் அமைச்சர் வாழ்த்து!!
சிம்மம் :
சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : அடர் நீலம்
கன்னி :
சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரம் லாபாகரமாக இருக்கும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 2
நிறம் : மஞ்சள்
துலாம் :
மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரம் சுமாராக இருக்கும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : ஊதா
விருச்சிகம் :
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரம் சுமாராக இருக்கும்.
துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 8
நிறம் : ஆரஞ்சு
தனுசு :
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.
காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் :6
நிறம் : அடர் சிவப்பு
மகரம் :
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கடன் வாங்க நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : பச்சை
கும்பம் :
பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : மஞ்சள்
பரபரக்கப் போகும் 10 ஆம் தேதி..! – “விட்றா வண்டியை ..!
மீனம் :
எதிரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
சாய்பாபா வழிபாடு நன்மை தரும் (2024 March 8).
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : கரும்பச்சை