அசோக் செல்வனின் படு மாஸான நடிப்பில் உருவாகி உள்ள Blue Star திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி (Star Hunt) வெற்றிநடை போடு வருகிறது .
ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.
சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .
அசோக் மற்றும் கீர்த்தியுடன் இணைந்து சாந்தனு பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்க்க நிச்சயம் இப்படம் வெற்றிபெறும் என அப்போதே பெரிகாலவில் பேசியப்பட்டது .
காரசாரமான என்ட்ரியுடன் அசோக் மற்றும் சாந்தனு எதிர் எதிர் கிரிக்கெட் வீரர்களாக வர . கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஏற்படும் சில துடிப்பான சம்பவங்கள் படத்தை தூக்கி பிடித்துள்ளது.
இதற்கிடையில் நம்ப அசோக் மற்றும் கீர்த்தி பாண்டியனின் காதல் காட்சிகளும் வருகிறது .
அதிலும் குறிப்பாக கிரிக்கெட்லயே எனக்கு ரொம்ப பிடிச்சது ஆல் ரவுண்டர் தான் என கீர்த்தி கூற நானும் ஆல் ரவுண்டர் தாண்டி என அசோக் கூறும் காதல் காட்சிகள் படத்திற்கு அழகு சேர்த்துள்ளது.
இறுதியில் எல்லா படங்களிலும் வருவது போல் பரபரப்பான காட்சிகளுடன் படத்தை முடிவுக்கு கொண்டு வருகின்றனர் .
தமிழ் சினிமாவில் வளர்ந்த்து வரும் நடிகர்கள் பட்டியலில் சரசரவென முன்னேறி வருபவர் நடிகர் அசோக் செல்வன் .
இவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும் அசோக் செல்வனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது .
Also Read : https://itamiltv.com/udhayanithi-meeting-with-dmk-officials/
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த குட்டி அப்டேட் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி இப்படம் சுமார் 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக (Star Hunt) திரை துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.